தமிழ்நாடு

tamil nadu

Neet PG 2023: "நீட்" மதிப்பெண் மற்றும் பெர்சன்டைல்.. வித்தியாசம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 5:43 PM IST

Updated : Sep 21, 2023, 6:53 PM IST

Neet Percentile: "நீட்" மதிப்பெண் மற்றும் பெர்சன்டைல் கணக்கிடுவது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் எடுத்திருந்தாலே மருத்துவ கல்வியிடம் பெறத் தகுதி உடையவராவார் என அறிவிக்குமாறு, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதியிருந்தாலே தனியார் அல்லது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவ கல்வியிடம் பெற தகுதியுடையவராவார். கட் ஆஃப் மதிப்பெண் ஜீரோ பர்சன்டைல் ஆக மாற்றப்பட்டுள்ளது.

சரி, பர்சன்டேஜ்க்கும், பர்சன்டைலுக்கும் என்ன வித்தியாசம். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு பரிச்சயமான இந்தி வார்த்தைகள் தற்போது அனைவராலும் தேடப்படுகிறது. பர்சன்டைல் என்பது தேர்வாளர்களின் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப்படுத்துவதாகும். ஒரே மதிப்பெண் பெற்றவர்கள் ஒரே வகையான பர்சன்டைலின் கீழ் வருவார்கள்.

உதாரணத்திற்கு நடந்து முடிந்த யுஜி நீட் தேர்வு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டின் பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவின் போரா வருண் சக்ரவர்த்தி ஒரே பர்சன்டைல் பெற்றவர்களாவர். இவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் இவர்களின் பர்சன்டைல் 99.999901 ஆகும்.

இரண்டாவது மதிப்பெண்ணான 716 மதிப்பெண் ஒருவர் மட்டுமே பெற்றுள்ளார். இவரது பர்சன்டைல் 99.999852 ஆகும். இதே போன்று 3 வது இடத்தை 7 பேர் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவருக்குமே ஒரே பர்சன்டைல் கிடைக்கும். இவ்வாறு கடைசி மதிப்பெண் எடுத்தவர் பூஜ்ஜியம் பர்சன்டைல் எடுத்தவர் ஆவார்.

எனவே புதிய விதிப்படி பூஜ்ஜியம் பர்சன்டைல் எடுத்தவரும் மருத்துவப்படிப்புகளில் சேர தகுதி உடையவர் ஆவார். இவர் தனக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்காத நிலையில், மேனேஜ்மெண்ட் கோட்டா எனப்படும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழுள்ள இடங்களில் பணம் செலுத்தி இணைய வேண்டிய நிலை ஏற்படும்.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போ நீட் தேர்வின் பலன் பூச்சியம் என்பது மத்திய அரசின் நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் நீட் தேர்வினால், தனியார் பயிற்சி நிறுவனங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளும் தான் பலன் பெறப் போகின்றன என்ற தங்களின் குற்றச்சாட்டு மீண்டும் ஒரு முறை நிரூபனம் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:செல்போனிற்கு சைரன் ஒலியுடன் வந்து அவசர எச்சரிக்கை! மக்களே பயப்பட தேவையில்லை!

Last Updated :Sep 21, 2023, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details