தமிழ்நாடு

tamil nadu

விமான நிலைய பாதுகாப்புக்கு அதிநவீன தொழில்நுட்பம் அவசியம் - நாடாளுமன்றக் குழு

By

Published : Dec 21, 2022, 10:41 AM IST

அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் பாதுகாப்புக்கு அதிநவீன தொழில்நுட்பம் அவசியம் என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

விமான நிலையம்
விமான நிலையம்

டெல்லி: அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் அதிநவீன தொழில்நுட்பம் தேவை, பல விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் குழுக்கள் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையில், சிவில் விமான போக்குவரத்து துறையில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

போக்குவரத்து, சுற்றுலாத்துறை தொடர்பாக நாடாளுமன்றக் குழு, பல விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் படை (BDDS) இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. சிஐஎஸ்எப் ஆல் நிர்வகிக்கப்படும் அனைத்து விமான நிலையங்களிலும் பிடிடிஎஸ் வைத்திருப்பதற்கு பிசிஏஎஸ் ஆல் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் உள்ளன என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்தது.

பிசிஏஎஸ் என்பது சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் மற்றும் சிஐஎஸ்எப் என்பது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையாகும். 44 விமான நிலையங்களில் பிடிடிஎஸ் செயல்படவில்லை என்று நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்தது.

இதுதவிர, தொழில்நுட்பத்தில் வேகமாக மாறிவரும் முன்னேற்றங்களுக்கு மத்தியில், அனைத்து இந்திய விமான நிலையங்களிலும் பாதுகாப்பிற்கான அதிநவீன தொழில்நுட்ப அவசியத்தை குழு வலியுறுத்தியது. மேலும், முழுமையான பாதுகாப்பு அமைப்பை உறுதி செய்தது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஜிலானியின் சொத்துகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details