தமிழ்நாடு

tamil nadu

3 கி.மீ தொலைவு கொண்ட ரயிலில் 16 ஆயிரம் டன் நிலக்கரி!- தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் புதிய மைல்கல்

By

Published : May 18, 2022, 9:48 AM IST

சத்தீஸ்கரில் நான்கு ரேக்குகள் கொண்ட நிலக்கரி ஏற்றப்பட்ட ரயில்களை ஒரே யூனிட்டாக சுமார் 2.8 கிலோமீட்டராக இணைத்து, மிக நீளமான சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இது தென்-கிழக்கு மத்திய ரயில்வே துறையின் சிறந்த செயலாக கருதப்படுகிறது.

3 கி.மீ தொலைவு கொண்ட ரயிலில் 16 ஆயிரம் டன் நிலக்கரி!-  தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் புதிய மைல்கல்
3 கி.மீ தொலைவு கொண்ட ரயிலில் 16 ஆயிரம் டன் நிலக்கரி!- தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் புதிய மைல்கல்

சத்தீஸ்கர்:சத்தீஸ்கரில் உள்ள தென்கிழக்கு மத்திய இரயில்வே (SECR) மண்டலம் சென்ற திங்கள் கிழமை (மே 16) மாலை, நான்கு ரேக்குகள் கொண்ட நிலக்கரி ஏற்றப்பட்ட ரயில்களை ஒரே யூனிட்டாக சுமார் 2.8 கிலோமீட்டராக இணைத்து, மிக நீளமான சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.

SECR(தென்கிழக்கு மத்திய இரயில்வே மண்டலம்) இந்த சிறப்பு சரக்கு ரயிலுக்கு 'சூப்பர் சேஷ்-நாக்' என்று பெயரிட்டுள்ளது. 232 வேகன்கள் கொண்ட நான்கு இன்ஜின்கள் செயல்படுகிறது. இதனை 12 பணியாளர்கள் இயக்கினர். இது கோர்பாவிலிருந்து நாக்பூருக்கு ஒரே நேரத்தில் 16,000 டன் நிலக்கரியை அனுப்பியுள்ளது.

முன்னதாக ஜனவரி 2021 இல், இந்த மண்டலத்தால் 300 வேகன்களை உள்ளடக்கிய ஐந்து ரயில்களை ஒன்றிணைத்து, 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு தனியாக நீண்ட தூர ரேக்குகளாக, இதுவரை இல்லாத அளவுக்கு நீளமான சரக்கு ரயிலை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இதுவே இதுவரை சாதனையாக உள்ளது.

தற்போது 'சூப்பர் ஷேஷ்-நாக்' நீளம் அதிகமாக இருந்ததால் ரயில்கள் சிங்கள் டிராக்கில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:95 வயது வரை ஓய்வூதியம் பெறும் குஜராத் முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details