தமிழ்நாடு

tamil nadu

'பெண் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை பாராட்டும் நாள் இது' - பிரதமர் மோடி ட்வீட்!

By

Published : Jan 24, 2021, 1:16 PM IST

டெல்லி: பெண் குழந்தைகள் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டிய நாள் இது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி
டெல்லி

ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில், "பல்வேறு துறைகளில் சாதித்த பெண் குழந்தைகளை வணங்குகிறோம். பெண் குழந்தைகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டிய நாள் இது" எனத் தெரிவித்தார்.

இந்நாளில் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளுக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details