தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் ரிசல்ட் - மும்பையில் புதிய வசதி

By

Published : Dec 29, 2020, 8:34 PM IST

கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் பரிசோதனையின் முடிவினை தெரிவிக்கும் வகையில், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகளை இந்த மையம் தெரிவிக்கிறது. இதற்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் பெறப்படுகிறது.

இந்த பரிசோதனை மையமானது கடந்த 15ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கிய நிலையில், நாளொன்றுக்கு 30-35 பேர் வரை பரிசோதனை செய்துகொள்ள வருவதாக, விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றுவரை (டிச.28) 400 எக்ஸ்பிரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெகு விரைவில் கிடைக்கப்பெறும் இந்த பரிசோதனை முடிவுகள் மிக துல்லியமாக இருக்கும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டு இந்த எக்ஸ்பிரஸ் கரோனா பரிசோதனையை தொடங்கியுள்ள ஒரே விமான நிலையம் இதுவாகும். அப்பாட்டி-ன் இந்த ரேபிட் மாலிகுலர் டெஸ்டிங் தொழில்நுட்பம் மூலம் வேகமாகவும், துல்லியமாகவும் கரோனா பரிசோதனை முடிவுகளை பெற முடியும் என விமானநிலைய ஆப்ரேட்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய விமான ஊழியர், "இதன் மூலம் முடிவுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதுடன், முன்னெச்சரிக்கையாக பிறருக்கு பரவுவதை பயணிகள் தடுக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க:நாடு முழுவதும் 18 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details