தமிழ்நாடு

tamil nadu

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை?

By

Published : Mar 16, 2023, 9:54 AM IST

நியூசிலாந்து கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Etv Bharat
Etv Bharat

வெலிங்டன்:நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளி 1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. காலை 6.40 மணிக்கும், அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கும் என அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

முதல் நடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்கு ராட்சத அலைகள் எழும்பும் வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நியூசிலாந்து தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம், ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருப்பின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

அதேபோல் நியூசிலாந்தின் அண்டை நாடான ஆஸ்திரேலியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

உலகின் இரண்டு முக்கிய டெக்டானிக் தட்டுகளான பசிபிக் மற்றும் ஆஸ்திரேலிய தட்டுகளின் எல்லையில் நியூசிலந்து உள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக நியூசிலாந்து நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

பெரும்பாலான நில நடுக்கங்கள் உணர முடியாத அளவுக்கு சிறிதாக இருப்பதாகவும் சில நில நடுக்கங்களே பெரும் அதிர்வுகளை உருவாக்கி நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதாக நியூசிலாந்து நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க:மராட்டியத்திலும் H3N2 வைரஸால் உயிரிழப்பா? வேகமெடுக்கும் பரவல்!

ABOUT THE AUTHOR

...view details