தமிழ்நாடு

tamil nadu

தாடி வைத்திருந்தால் பாகிஸ்தானியரா? - ஒவைசி கண்டனம்!

By

Published : Sep 20, 2022, 9:50 PM IST

ராஜ்கர் சிறையில் இஸ்லாமிய கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக வெட்டிய சம்பவத்துக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rajgarh
Rajgarh

ராஜ்கர்: மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து இஸ்லாமிய கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக வெட்டியதாக புகார் எழுந்தது. சிறைக் காவலர் தங்களது தாடியைப் பார்த்து ஆத்திரமடைந்து, அதனை வெட்டியதாகவும், தங்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறி திட்டியதாகவும் சிறையிலிருந்து வெளியே வந்த கைதிகள் குற்றம் சாட்டினர்.

இஸ்லாமிய மத உணர்வை புண்படுத்திய சிறைக்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக தாடியை வெட்டிய சம்பவத்துக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறைக்கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக வெட்டுவது விதிமீறல், போலீசார் செய்த சித்திரவதை. தாடி வைத்திருப்பதால் ஒருவர் பாகிஸ்தானியர் ஆக முடியாது, பல சுதந்திர போராட்ட வீரர்கள் தாடி வைத்திருந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் 7% இஸ்லாமியர்கள் உள்ளனர், விசாரணையில் உள்ள இஸ்லாமியர்களில் 14% பேர் சிறைகளில் உள்ளனர். மத்தியப் பிரதேச சிறைகளில் உள்ள கைதிகளில் 56% பேர் இஸ்லாமியர்கள். இது முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறைக்காவலரை சஸ்பெண்ட் செய்து, சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: குஜராத் சென்ற கெஜ்ரிவால் - மோடி மோடி என முழக்கமிட்டு எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details