தமிழ்நாடு

tamil nadu

தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவந்த மயிலால் விபத்து

By

Published : Jul 21, 2021, 4:16 PM IST

தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர் மீது மயில் பறந்துவந்து மோதியதில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவந்த மயிலால் விபத்து
தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவந்த மயிலால் விபத்து

உடுப்பி: கர்நாடக மாநிலம், கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள கவுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூலை 20) அப்துல்லா (24) என்ற இளைஞர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தார்.

அப்போது சாலையில் மயில் ஒன்று ஒருபுறத்திலிருந்து பறந்துவந்து அவர் மீது மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த அப்துல்லா கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மீது மோதிய மயிலும் அதே இடத்தில் இறந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவந்த மயிலால் விபத்து

அவர் பெலாபுவிலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ள பதுபித்ரிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்துல்லாவைமருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது,அவரைப்பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதையும் படிங்க: 'ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்கள் நிகழவில்லையா? அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் புகார்!'

ABOUT THE AUTHOR

...view details