தமிழ்நாடு

tamil nadu

தேசிய விளையாட்டு தினத்தில் ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிரதமர் புகழாரம்

By

Published : Aug 29, 2022, 1:27 PM IST

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தியான்சந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தில் ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு  மோடி ட்விட்டரில் அஞ்சலி
தேசிய விளையாட்டு தினத்தில் ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு மோடி ட்விட்டரில் அஞ்சலி

டெல்லி: இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரரான மேயர் தியான் சந்தின் பிறந்த நாளாகும். இதனையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தியான் சந்த் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதோடு "தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள் மற்றும் மேஜர் தியான் சந்த் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம். கடந்த சில வருடங்களாக விளையாட்டுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தப் போக்கு தொடரட்டும். விளையாட்டு இந்தியா முழுவதும் பிரபலமடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த தியான் சந்த்..? இந்தியா ஹாக்கி அணி ஒலிம்பிக் விளையாட்டில் மூன்று முறை தங்கம் வென்ற போது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர தியான் சந்த். இவர் இந்தியாவிற்காக விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்கள் அடித்துள்ளார். உலகில் ஹாக்கியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மேஜர் தியான் சந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே அவரது பிறந்த நாளில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. தயான் கோல் அடிக்கும் யுக்தி மற்றும் பந்தை சிறந்த கட்டுபாட்டுக்குள் வைப்பது ஆகியவற்றிற்கு உலக ஹாக்கி அரங்கில் பெயர் பெற்றவராகும்.

தேசிய விளையாட்டு தினத்தின் நோக்கம்: இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 29) விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மக்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட ஊக்குவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. விளையாடுவதால் மனம் மற்றும் உடல் நிலை சீராக இருக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் உள்ளது.

நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் ஆகியோர் நாட்டின் சில விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனை படைத்த வீரர்கள், ஃபிட்னஸ் ஐகான்களுடன் உரையாட உள்ளனர். இந்தியாவில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க இந்த உரையாடல் நடக்க இருக்கிறது.

இதையும் படிங்க:இந்தியாவில் சுசூகியின் வெற்றி இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான கூட்டுறவைக் குறிக்கிறது

ABOUT THE AUTHOR

...view details