தமிழ்நாடு

tamil nadu

ஈத் பண்டிகை - குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

By

Published : Jul 10, 2022, 12:49 PM IST

ஈத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈத் புனித நாளுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து
ஈத் புனித நாளுக்கு மோடி, ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத்-உஸ்-ஜுஹா நல்வாழ்த்துக்கள். ஈத்-உஸ்- பண்டிகை தியாகம் மற்றும் மனித சேவையின் சின்னமாகும்.

மனித குலத்தின் சேவைக்காக நம்மை அர்ப்பணித்து, நாட்டின் செழிப்புக்காகவும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘ரமலான்! ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டான நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை...

ABOUT THE AUTHOR

...view details