தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.வுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனை

By

Published : Aug 17, 2021, 2:49 PM IST

கொலை மிரட்டல் வழக்கில், மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. தேவேந்திர பூயாருக்கு, மாவட்ட நீதிமன்றம் மூன்று மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது.

Devendra Bhuyar
Devendra Bhuyar

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோர்ஷி-வரூத் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தேவேந்திர மகாதேவ் ராவ் பூயார் மீதான கொலை வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வந்தது.

இவ்வழக்கில் எம்.எல்.ஏ. குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு மூன்று மாத சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துள்ளது.

வழக்கின் பின்னணி

2013ஆம் ஆண்டில், அன்றை வரூத் பகுதி வட்டாட்சியர் ராம் லங்காவுக்கு தேவந்தரா பூயார் கொலை மிரட்டல் விடுத்ததாகவும்; தனது பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் கும்பலுடன் நுழைந்த தேவேந்திர மகாதேவ் பூயார், அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசி தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக எம்.எல்.ஏ. தேவேந்திர மகாதேவ் பூயார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details