தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு காஷ்மீருக்கு எச்சரிக்கை

By

Published : Sep 8, 2021, 10:48 PM IST

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

MHA
MHA

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், பிராந்திய அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு குறித்த அச்சநிலை நிலவிவருகிறது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் எச்சரிக்கையாக இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளாதாகக் கூறி அங்கு பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவினைத் தலைவர் சயித் கிலானி உயிரிழந்த நிலையில், அவர் மறைவுக்கு அல்கொய்தா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. இதை கவனத்தில் கொண்ட பாதுகாப்பு அமைப்புகள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதேவேளை, சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப்பின் ஜம்மு காஷ்மீருக்கு அமைச்சர்கள் குழு செப்டெம்பர் 10ஆம் தேதி பயணிக்கவுள்ளது. இந்தக் குழு பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளது.

இதையும் படிங்க:ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details