தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு

By

Published : Jan 20, 2023, 10:50 AM IST

Updated : Jan 20, 2023, 11:02 AM IST

கேரள மாநில அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு
கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு

உலகின் பல்வேறு நாடுகளில் பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்புை போல் மாதவிடாய் விடுப்பும் வழங்கப்படுகிறது. சில நாடுகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாதவிடாய் விடுப்புகள் வழங்கப்படும் வழக்கமில்லை. சில தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுப்பு வழக்கத்தில் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் கிடையாது. பல கல்லூரிகளில் மாணவிகள் மாதவிடாய் விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுப்பதாலும், திருமணமானவர்கள் மகபேறு விடுப்பு எடுப்பதாலும் வருகை பதிவு சதவீதம் குறைவதாலேயே கோரிக்கை எழுகிறது. இதனை கருத்தில் கொண்டு கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெண் மாணவிகள் 73 சதவீத வருகைப் பதிவு இருந்தால், செமஸ்டர் தேர்வெழுதலாம் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், கேரள உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பும், 18 வயதை கடந்த மாணவிகளுக்கு அதிகபட்சமாக 60 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள உயர்கல்வித்துறையின் இத்தகைய உத்தரவு கேரள மாநிலத்தை முன்மாதிரியாக திகழச்செய்கிறது. இது பாலின சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான இடதுசாரி அரசாங்கத்தின் உறுதித்தன்மையை வெளிபடுத்துகிறது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘நீதிபதிகள் தேர்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்’ - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Last Updated : Jan 20, 2023, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details