தமிழ்நாடு

tamil nadu

மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு!

By

Published : Feb 6, 2021, 7:29 PM IST

மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

transwoman becomes youth Congress general secretary transwoman wins election transgender wins election in Mangaluru youth Congress general secretary Dakshina Kannada district elections மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு சஞ்சனா சலாவதி மங்களூரு இளைஞர் காங்கிரஸ்
transwoman becomes youth Congress general secretary transwoman wins election transgender wins election in Mangaluru youth Congress general secretary Dakshina Kannada district elections மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை தேர்வு சஞ்சனா சலாவதி மங்களூரு இளைஞர் காங்கிரஸ்

மங்களூரு: மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக முதல் முறையாக திருநங்கை சஞ்சனா சலாவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருநங்கை சஞ்சனா சலாவதி தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், அழகுக் கலை நிபுணராக வேலை செய்துவருகிறார்.

இவர் ஜனவரி 10,11,12ஆம் தேதிகளில் நடந்த மங்களூரு இளைஞர் காங்கிரஸ் தேர்வில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளார்.

இந்தத் தேர்தலில் தலைவராக சிவா என்பவரும், துணைத் தலைவராக சோகன் மற்றும் தீக்ஷித் பூஜாரி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிப் பெற்றது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் சஞ்சனா சலாவதி கூறுகையில், “இளைஞர் காங்கிரஸ் தெற்குத் தொகுதியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திருநங்கைகள் சமூகத்தில் சமூக களங்கத்தை இன்னமும் எதிர்கொள்கின்றனர்.

நாங்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னும், நான் அரசியலில் நுழைந்தேன். என்னை கௌரவிக்கும் மங்களூரு மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தங்களுக்கு சமமான வாய்ப்புகளையும் அந்தஸ்தையும் பெற போராடும் திருநங்கைகளுக்கு நான் உதவுவேன். நான் அழகு கலை படிப்பை முடித்து ஒரு அழகு நிபுணராக பணியாற்றி வருகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து தேர்தல் 2021: பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை

ABOUT THE AUTHOR

...view details