தமிழ்நாடு

tamil nadu

உபியில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு.. 2 மாதங்களுக்குள் குற்றவாளிக்கு மரண தண்டனை..

By

Published : Feb 4, 2023, 7:02 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச பாலியல் வழக்கு
குற்றவாளிக்கு மரண தண்டனை

காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம் இன்று (பிப்.4) ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஷாஹிபாபாத் அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டது.

இந்த உடலின் உடற்கூராய்வு முடிவுகள் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படிருப்பதை உறுதி செய்தன. இதனிடையே காசியாபாத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தது தங்களது மகள் என்பதை உறுதி செய்ததுடன், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகள் 363, 376 AB, 302, 201 0f ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சம்பவத்தின்போது, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதனடிப்படையில் அவரை பிடித்து விசாரிக்கையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு காசியாபாத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. டிசம்பர் 15ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 15 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க:நிலத் தகராறு காரணமாக வெறிச்செயல்.. சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..

ABOUT THE AUTHOR

...view details