தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே...! காங்கிரசில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அத்தியாயம் தொடக்கம்!

By

Published : Oct 19, 2022, 1:57 PM IST

Updated : Oct 19, 2022, 4:45 PM IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அதன்படி 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி:அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும், எம்பி சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 9,915 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில், சுமார் 9,500 பேர் வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று(அக்.19) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வாகியுள்ளார்.

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பின்னர் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில், ஆறாவது முறையாக நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: பட்டியலின முகமான கார்கேவுக்கு தாமதமாக அங்கீகாரம் தந்த காங்கிரஸ்!

Last Updated :Oct 19, 2022, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details