தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவில் சொகுசு படகு இல்லம் சேவை தொடக்கம்

By

Published : Jan 7, 2021, 2:09 PM IST

கர்நாடகா மாநிலத்தில், சுற்றுலாப் பயணிகளுக்காக சொகுசு படகு இல்லம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சொகுசு படகு இல்லம் சேவை
சொகுசு படகு இல்லம் சேவை

பெங்களூரு:கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து மிதவை இல்லம் எனப்படும் சொகுசு படகு இல்ல சேவையைத் தொடங்கியுள்ளனர். இந்தப் படகு இல்லங்கள், அனைத்து வயது பயணிகளுக்கும் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும் என அந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.

சொகுசு விடுதிகளைப் போன்று இதில், பார்ட்டி ஹால், சொகுசு மெத்தைகள், அறைகள் உள்ளன. பயணிகளின் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தப் படகில், ஐந்து வித்தியாசமான அறைகளும், பார்ட்டி ஹால்களும் உள்ளன.

கேரளாவிலுள்ள படகு இல்ல சேவையை உந்துதலாகக்கொண்டு, 100 அடி உயரமும், 20 அடி அகலமும் கொண்ட இந்த படகினை இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அதேநேரத்தில், பாதுகாப்பு உபகரணங்களும் படகில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிபுணர்கள் 24 மணி நேரமும் படகில் இருப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பறவைக் காய்ச்சல் : பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details