தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் எதிரொலி - நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு!

By

Published : Aug 11, 2023, 1:01 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக, இன்றே (ஆகஸ்ட் 11ஆம் தேதி) முடிவடைகிறது.

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் எதிரொலி - நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு!
காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் எதிரொலி - நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு!

டெல்லி:ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவை காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் மக்களவையில் காங்கிரஸ் மற்றும் INDIA கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, அவையை, நண்பகல் 12 மணிக்கு ஒத்தி வைத்தார்.

அதேபோல், மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக, பாரதிய ஜனதா கட்சி எம்பி கிரோடி லால் மீனா அவையில் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஜெகதீப் தங்கார், 12 மணிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் 12 மணிக்கு மக்களவை கூடியதும், அமளி தொடர்ந்து நீடித்ததால், அவை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

INDIA கூட்டணி எம்பிக்கள் ஊர்வலம் :மக்களவையில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவை நடவடிக்கைகளை, INDIA கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு குறியீடு மசோதா 2023 குறித்து உரையாற்றி வருகிறார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக, இன்றே (ஆகஸ்ட் 11ஆம் தேதி) முடிவடைகிறது.

இதையும் படிங்க: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் விவகாரம் - காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details