தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கத்தில் குர்மி சமூக மக்கள் போராட்டம்... 205 ரயில்கள் ரத்து...

By

Published : Sep 23, 2022, 9:07 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் குர்மி சமூக மக்களின் ரயில் மறியல் போராட்டம் நான்காவது நாளாக நீடித்துள்ளது.

Kurmi stir hits rail services for fourth day; 205 trains cancelled so far
Kurmi stir hits rail services for fourth day; 205 trains cancelled so far

கொல்கத்தா: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்தும் செப்டம்பர் 20ஆம் தேதி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குர்மி சமூக மக்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஜார்க்கண்ட், ஒடிசாவில் போராட்டங்களை கலைக்க செய்தனர். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள குஸ்தார் மற்றும் கெமசுலி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் 4ஆவது நாளாக தொடர்கிறது. இதனால் 205 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

89 ரயில்கள் திருப்பி விடப்பட்டன. நான்கு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குர்மி சமூக மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கும்படி 2ஆவது முறையாக மத்திய பழங்குடியின நல அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:நகர்ப்புற நக்சல் குழுக்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details