தமிழ்நாடு

tamil nadu

மார்கதர்சி சிட்பண்ட் வழக்கு - ஆந்திர சிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 5:21 PM IST

மார்கதர்சி சிட்பண்ட் தொடர்பான வழக்கில் ஆந்திர பிரதேச சிஐடி போலீசாருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கான நீதிமன்றங்கள் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளன.

Margadarsi Chit Funds case
மார்கதர்சி சிட்பண்ட் வழக்கு

ஹைதராபாத்/அமராவதி:மார்கதர்சி சிட்பண்ட் அலுவலகங்களில் சோதனைகள் நடத்த ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சோதனைகள் நடந்தாலும் விதி எண் 46ஏ-வை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு வழக்கில் மார்கதர்சி தொடர்பான வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என ஆந்திர சிஐடி போலீசாருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்கதர்சி வழக்கில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதற்கான அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கை அடுத்த மாதம் 12ஆம் தேதி வரையிலும் ஒத்திவைத்து தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர அரசு பதில் மனு தாக்கல் செய்ய தாமதிப்பதாக மார்கதர்சி வழக்கறிஞர் முறையிட்ட நிலையில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "மார்கதர்சி சிட்பண்ட் ஆர்பிஐ விதிகள் படியே இயங்குகிறது" - ஆந்திர போலீசாரால் சந்தாதாரர்களுக்கு தொல்லை என புகார்!

ABOUT THE AUTHOR

...view details