தமிழ்நாடு

tamil nadu

KSRTC Woman Attacked: கேரள அரசு பேருந்தில் தமிழக பெண்ணுக்கு கத்திகுத்து.. கேரள இளைஞர் தற்கொலைக்கு முயற்சி!

By

Published : May 5, 2023, 12:04 PM IST

கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஓடும் பேருந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை தாக்கிவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கேரள இளைஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டு இளம்பெண்ணை பேருந்தில் தாக்கிய கேரள இளைஞர்
தமிழ்நாட்டு இளம்பெண்ணை பேருந்தில் தாக்கிய கேரள இளைஞர்

மலப்புரம்: கேரள மாநிலம் மூணாறில் இருந்து பெங்களூரு செல்லும் கேரள அரசு போக்குவரத்து கழகம்(KSRTC) பேருந்தில் நேற்று (மே 4) தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்த சீதா மற்றும் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சனில் என்ற இருவர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பயணிகள் உணவருந்த மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வென்னியூர் அருகே பேருந்து நின்றுள்ளது. பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு முடித்து பேருந்து புறப்பட்டுள்ளது. தொடர்ந்து, வென்னியூர் அருகே உள்ள திருரங்காடியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென சனில், சீதாவை கொடூரமாக கத்தியால் குத்திவிட்டு, பின்னர் சனிலும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவரும் முதலில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இது குறித்து காவல் துறை தரப்பில், "தாக்குதல் நடத்தியவரும், தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த பேருந்தில் பலரும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முன்பதிவு செய்யவில்லை. இதில், இளம்பெண் அங்கமலியில் இருந்தும், சனில் எடபாலில் இருந்தும் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகே சம்பவத்தின் முழு விவரம் தெரிய வரும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Tirunelveli Nurse murder: நடுரோட்டில் நர்ஸ் எரித்துக்கொலை; கணவர் வெறிச்செயல்.. நெல்லையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details