தமிழ்நாடு

tamil nadu

கர்நாடகாவில் 14 நாள் ஊரடங்கு; பொது போக்குவரத்து முடக்கம்!

By

Published : Apr 26, 2021, 3:33 PM IST

Updated : Apr 26, 2021, 3:39 PM IST

கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரத் தன்மை அதிகரிப்பதால் கர்நாடகாவில் 14 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா
கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில், அடுத்த 14 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை(ஏப்.27) இரவு 9 மணிக்கு மேல் தொடங்கும் இந்த ஊரடங்கில், காலை 6-10 மணி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும். பொது போக்குவரத்து முற்றாக நிறுத்திவைக்கப்படுகிறது.

கட்டுமானம், உற்பத்தி, வேளாண்துறைகள் மட்டும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படும் என, மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 34,804 பாதிப்புகள்,143 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிபிஇ உடையுடன் வந்த மணப்பெண் - கோவிட் வார்ட்டில் தாலி கட்டிய மாப்பிள்ளை!

Last Updated :Apr 26, 2021, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details