தமிழ்நாடு

tamil nadu

கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியல் வெளியீடு.... யார் முதல்ல தெரியுமா?

By

Published : Jul 20, 2023, 10:23 PM IST

நாட்டின் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளை கொண்டு முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

DK Shivakumar
DK Shivakumar

பெங்களூரு :நாட்டின் பணக்கார எம்.எல்.ஏவாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவாகுமார் கண்டறியப்பட்டு உள்ளார். அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் என்றாலே இன்றைய காலக்கட்டத்து இளைஞர்களின் பார்வையில் சாக்கடை என்றும், பழைய ஆட்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என இரண்டு வெவ்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. நாட்டு மக்களுக்காக உழைக்கவும், தேச நலனை மையமாக கொண்டும் சிலர் அரசியலுக்கு வரும் நிலையில், லாட்டரி சீட்டில் பணம் கொழிப்பது போல் குறுகிய காலத்தில் பணக்காரராக மாறுவதற்கு பலர் தேர்ந்தெடுக்கும் துறையாக அரசியல் பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல.

அதேநேரம், ஒருசிலர் பரம்பரை பணக்காரர்களாக இருந்த போதிலும் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருகின்றனர். அப்படி பன்முகங்களை கொண்டு இருக்கிறது அரசியல். அந்த வகையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு மக்கள் பிரதிநிதிகளாக காணப்படும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி நாட்டின் பணக்கார எம்.எல்.ஏவாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் காணப்படுகிறார். அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் நாட்டின் மிக ஏழை எம்.எல்.ஏவாக மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமர் தாரா என்பவர் கண்டறியப்பட்டு உள்ளார்.

நிர்மல் குமார் தாராவின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 20 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் 10 கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரும், பாஜகவின் 3 பேரும் இடம் பெற்று உள்ளதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா மாநிலம் கவுரிபிதனூர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏவான கே.எச் புட்டசுவாமி கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ஆயிரத்து 267 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியகிருஷ்ணா ஆயிரத்து 156 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார்.

குறைந்த சொத்து மதிப்பு கொண்ட எம்.எல்.ஏக்கள் பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த பாஜக உறுப்பினர் பாகிரதி முருள்யா 28 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் 2 லட்ச ரூபாய் கடனும் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகவில் உள்ள ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களில் 14 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அவர்களது தனிநபர் சொத்து மதிப்பு மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் 59 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமான பத்திரங்களில் இருந்து பெறப்பட்டவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழித்து ரூ.6ஆயிரத்தை இழந்த நபர்! நடந்தது என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details