தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து - புதிய திட்டங்கள் அறிவிப்பு!

By

Published : Jul 29, 2022, 11:05 AM IST

கர்நாடகா மாநிலம் தொட்டபள்ளப்புராவில் நடைபெறவிருந்த, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து - புதிய திட்டங்கள் அறிவிப்பு!
கர்நாடக முதலமைச்சரின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து - புதிய திட்டங்கள் அறிவிப்பு!

பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, தொட்டபள்ளப்புராவில் நடைபெறவிருந்த, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, கர்நாடகா முதலமைச்சர் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் நலத்திட்டங்கள்:

  1. பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு75 யூனிட் இலவச மின்சாரம். மேலும் டிபிடி முறை மூலம் நேரடியாக மின் பரிமாற்றம் இன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக அம்மாநில அரசு 700 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளது.
  2. இளைஞர்களுக்கான பாபு ‘ஜக்ஜீவன் ராம்' சுயவேலைவாய்ப்புத் திட்டம்
  3. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100 இளைஞர்களுக்கு சுயதொழில் உதவிகள் வழங்கும் திட்டம்.
  4. கல்வித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. எனவே 'விவேகா' திட்டத்தின் கீழ், 8,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
  5. 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை சமூக சுகாதார நிலையங்களாக மேம்படுத்தும் திட்டத்தை பொம்மை தொடங்கி வைத்தார்.
  6. கல்யாண கர்நாடகா பகுதியில் 71 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்படும்
  7. ஒவ்வொரு மகளிர் சுயஉதவி குழுவிற்கும் 'ஷ்ட்ரீ சாமர்த்யா யோஜேன்’ மூலம் ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
  8. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திறன்கள் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த முன்னோடி மிக்க பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
  9. மாநிலத்தில் உள்ள 28,000 கிராமங்களில் 'சுவாமி விவேகானந்தா யுவசக்தி சங்கங்கள்' திறக்கப்படும்.
  10. இளைஞர்களுக்கு சுயதொழில் பெற நிதியுதவி மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் 5 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்.
  11. படுகொலைகளில் இருந்து பசுக்களைக் காப்பாற்ற, மாநில அரசு பொதுமக்களின் பங்களிப்புடன் 'புண்யகோடி' மாடு தத்தெடுக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  12. ஒரு பசுவிற்கு ஆண்டுக்கு 11,000 ரூபாய் நன்கொடையாக வழங்குவதன் மூலமோ அல்லது பசுக்களை தத்தெடுப்பதன் மூலமோ ஒரு பசுவின் பராமரிப்பு செலவை பொதுமக்கள் ஏற்க இத்திட்டம் ஊக்குவிக்கும். இந்தத் தொகை, மாநிலத்தில் மேலும் கௌஷாலாக்களைத் (மாடுகள் வளர்ப்பகம்) திறக்கப் பயன்படுத்தப்படும், என்றார்.
  13. நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 'வித்யா நிதி' உதவித்தொகை மூலம் சுமார் 10,000 முதல் 12,000 குழந்தைகள் பயன்பெறுவர்.
  14. இந்த வித்யா நிதி திட்டத்தின் மூலம் 50,000 டாக்சி ஓட்டுநர்கள் பயனடைகிறார்கள். மேலும் இது மீனவர் குடும்பங்களின் குழந்தைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேவைப்பட்டால் கர்நாடகாவில் "யோகி மாடல்" கடைபிடிக்கப்படும் - சட்டம் ஒழுங்கு குறித்து பசவராஜ் பொம்மை பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details