தமிழ்நாடு

tamil nadu

"கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்" எடியூரப்பா அரசை குற்றம்சாட்டிய பாஜக எம்எல்ஏ.... கர்நாடக அரசியலில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 1:48 PM IST

BJP MLA Basangouda Patil Yatnal: கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக பாஜக எம்எல்ஏ குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Karnataka BJP MLA accused BJP government of Rs 40 thousand crore corruption during the Corona period
பாஜக அரசை குற்றம்சாட்டிய பாஜக எம்எல்ஏ

விஜயபுரா (கர்நாடகா):கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் முந்தைய பாஜக ஆட்சியின் போது கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

பாஜக எம்எல்ஏ பசன் கவுடா யத்னால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எனக்கு நோட்டீஸ் கொடுங்கள். கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். நான் அவர்கள் அனைவரின் ரகசியத்தையும் வெளியிடுவேன். மாநிலத்தை என் கையில் கொடுத்தால் நான் கர்நாடகாவை முன்னோடி மாநிலமாக மாற்றுவேன்,

நான் பணத்திற்கு அடிமை இல்லை, கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் விவசாயியின் பிள்ளை என்று சொல்லுகிறார்கள். விவசாயியின் பிள்ளை ஏன் அமெரிக்காவில் வீடு வாங்க வேண்டும். துபாயில் ஏன் சொத்து குவிக்க வேண்டும். யார் யார் கொள்ளை அடித்தார்கள்? எங்கெல்லாம் சொத்து சேர்த்தார்கள் என்பதெல்லாம் நான் கண்டுபிடிப்பேன்.

கரோனா காலத்தில் 45 ரூபாய் மாஸ்கிற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு மாஸ்கிற்கு 485 ரூபாய்க்கு பில் போட்டனர். பெங்களூரில் 10 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த 10 ஆயிரம் படுக்கைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அந்த வாடகை பணத்தில் படுக்கைகளை வாங்கி இருந்தால் இரண்டு அல்லது அதற்கு மேலும் படுக்கைகளை வாங்கி இருக்க முடியும். கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

கரோனாவின் போது ஒவ்வொரு நோயாளியிடமும் ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனக்கும் ரூ.5.80 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இவ்வளவு பணத்திற்கு ஏழை மக்கள் எங்கே போவார்கள் என நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். உடல்நலக் குறைபாட்டிற்காக இதுவரை அரசிடம் இருந்து எந்த பணத்தையும் நான் பெறவில்லை.

எம்எல்ஏ ஊதியமாக ரூ.2 லட்சம் கிடைக்கிறது. கமிட்டி கூட்டத்திற்கு சென்றால் ரூ.65 ஆயிரம் கிடைகிறது. இதற்கு மேல் இதையும் பெற்றால் நாம் மனிதர்களா? உண்மையைச் சொன்னால் அனைவரும் பயப்படுவார்கள். எல்லோரும் திருடராக மாறினால் மாநிலத்தையும் மக்களையும் யார் காப்பாற்றுவது. பிரதமர் மோடி இருப்பதால் இந்த நாடு பிழைக்கிறது.

இந்த நாட்டில் கடந்த காலங்களில் நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என பல ஊழல்கள் நடைபெற்றுள்ளது. மோடி ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலையாவது பார்த்துள்ளீர்களா? மோடி ஊழலில் ஈடுபட்டார் என்று சொல்லும் சக்தி யாருக்காவது இருக்கின்றதா? நாங்கள் யாருக்காகவும் இல்லை, மோடிக்காக பாடுபடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பாரத் நியாய யாத்திரை' இந்த முறை கிழக்கில் இருந்து மேற்கு.. ராகுல் காந்தியின் அடுத்த திட்டம்?

ABOUT THE AUTHOR

...view details