தமிழ்நாடு

tamil nadu

புதிதாக 25 பேருக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு!

By

Published : Nov 4, 2021, 8:19 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸால் புதிதாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.

சிகா வைரஸ்
சிகா வைரஸ்

கான்பூர் (உத்தரப்பிரதேசம்):கான்பூர் மாவட்ட சுகாதாரத் துறையின் அறிக்கையின்படி, இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 36 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

"நேற்று வரை 11 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. இன்று 25 புதிய நபர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

சுகாதாரத்துறை 400 முதல் 500 நபர்களின் ரத்த மாதிரிகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டது. அதே நேரத்தில் வீடு வீடாக மாதிரிகள் எடுக்கப்பட்டன" என கான்பூரின் தலைமை மருத்துவ அலுவலர் நேபால் சிங் தெரிவித்துள்ளார்.

நகரின் திவாரிபூர், அஷ்ரபாபாத், போகர்பூர், ஷியாம் நகர் மற்றும் ஆதர்ஷ் நகர் பகுதியில் ஜிகா வைரஸ் பாதிக்கபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

எதன்மூலம் ஜிகா வைரஸ் பரவும்?

கொசுவால் மட்டுமே பரவக்கூடிய இந்த நோய் குறித்து சுகாதாரத் துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், நோய்ப் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகும்படி சுகாதாரத் துறை மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஜிகா வைரஸின் அறிகுறிகள்?

கொசுக்கள் மூலமாகவே இந்த ஜிகா வைரஸ் பரவும். காய்ச்சல், உடலில் சிவப்புப் புள்ளிகள் ஏற்படுவது போன்றவை ஜிகா வைரஸின் அறிகுறிகளாகும்.

இதையும் படிங்க:பட்டாசு வெடித்ததில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு - தீபாவளியில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details