தமிழ்நாடு

tamil nadu

அரசியல் பிரவேசம் எடுக்கும் தலைவி! பாஜகவில் போட்டியிடுவது உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 10:15 PM IST

Kangana Ranaut Contest Lok Sabha Election 2024: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
Kangana Ranaut

டெல்லி :பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட தலைவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து சந்திரமுகி 2ஆம் பாகம் படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதையை பின்னணியாக கொண்ட எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போய் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வரும் கங்கனா ரனாவத், பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தார்.

இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த தகவல்களை மெய்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். கங்கனா ரனாவத்தின் தந்தை அமர்தீப் ரனாவத் அளித்த பேட்டியில், "கங்கனா ரனாவத் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

அவர் பாஜக சார்பில் மட்டுமே களமிறங்க உள்ளார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்" என்று தெரிவித்து உள்ளார். இதன் மூலம் கங்கனா ரனாவத் அரசியல் பிரவேசம் எடுக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா பாதிப்பு..!

ABOUT THE AUTHOR

...view details