தமிழ்நாடு

tamil nadu

காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் இளம்பெண்ணு மீது ஆசிட் வீச்சு!

By

Published : Apr 28, 2022, 8:07 PM IST

பெங்களூருவில் 23வயது இளம்பெண் மீது ஆசிட் வீசி தப்பிச்சென்ற நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணுக்கு ஆசிட் வீச்சு
இளம்பெண்ணுக்கு ஆசிட் வீச்சு

பெங்களூரு: பெங்களூருவில் 23வயது இளம்பெண் ஒருவர் நாள்தோறும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரை நாகேஷ் என்ற நபர் காதலிப்பதாக கூறி சொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு இதில் விருப்பமில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் நாகேஷ் அவரை பின்தொடர்ந்து சொந்தரவு செய்து வந்தாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நாகேஷ் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த நாகேஷ் இன்று (ஏப்.28) அந்தப் பெண் வேலைக்கு செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து சென்று சுங்கடகட்டேவில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் அலுவலகம் அருகே அந்தப் பெண் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்து அவர் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்றுள்ளார்.

பலத்த தீ காயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காமாட்சிபாளையா காவல்துறையினர் தப்பிச் சென்ற நாகேஷை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை - போக்சோவில் இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details