தமிழ்நாடு

tamil nadu

ஜெயிலர் தகர்த்தெறிந்த 16 சாதனைகள்.. எட்ட முடியாத உயரத்தில் சூப்பர் ஸ்டார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 3:07 PM IST

Updated : Sep 4, 2023, 8:26 PM IST

Jailer Box Office Records: ஜெயிலர் திரைபடம் உலகளவில் அதிவேகமாக ரூ.600 கோடியை தாண்டிய இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

jailer-milestones-here-are-box-office-records-registered-by-rajinikanth-starrer
உலகளவில் சாதனை படைத்த ஜெயிலர் திரைபடம்

எட்ட முடியாத உயரத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்

சென்னை:நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானநிலையில் 25 நாட்களை கடந்தும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 16 வசூல் சாதனைகளை படைத்துள்ளது.

இதுகுறித்து திரைப்பட வர்தக ஆய்வாளரான மனோபாலா விஜயபாலன், பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலரின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் சுமார் 300 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனை செய்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஜெயிலரின் சிறப்பான சாதனைகளில் ஒன்று, தமிழ்நாட்டின் ’ஆல் டைம் நம்பர் ஒன் தமிழ் திரைப்படம்’ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. அதுமட்டும் மல்லாது அண்டை மாநிலங்களான, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது இது ரஜினிகாந்தின் பான்-இந்தியா இமேஜை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரூ.50 கோடி வசூலைக் கடந்த முதல் தமிழ் திரைப்படம் ஜெயிலர் தான்.

ஜெயிலர் படத்தின் சாதனைகள்

ஜெயிலர் திரைப்படம் கடல் கடந்து சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில், நம்பர் ஒன் தமிழ் திரைப்படமாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போல் மலேசியா, சவூதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் தமிழ் திரைப்படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் சாதனைகள்

இதன் மூலம் உலகளவில் அதிவேகமாக ரூ.600 கோடியை தாண்டிய இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான எந்திரன் 2.0 மட்டுமே இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை வேகமாக எட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடதக்கது.

ஜெயிலர் படத்தின் சாதனைகள்

மனோபாலா விஜயபாலனின் சமீபத்திய அப்டேட்டின்படி, ஜெயிலர் உலகளவில் 637 கோடி ரூபாய் மொத்த வருவாயைக் குவித்துள்ளது. படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் ஜெயிலர் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. நெல்சன் இயக்கிய இப்படத்தில் வசந்த் ரவி, தமன்னா பாட்டியா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடித்தது இப்படம் பான்-இந்தியா அளவில் சென்றடைய பெற வழிவகுத்துள்ளது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி செம்டம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க :Sourav Ganguly biopic: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

Last Updated : Sep 4, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details