தமிழ்நாடு

tamil nadu

பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினிகாந்த்... 6 நாளில் ஜெயிலர் வசூல் இவ்வளவா?

By

Published : Aug 16, 2023, 11:25 AM IST

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களில் வரிசையில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 200 கோடியை தாண்டிய ‘ஜெயிலர்’ வசூல்!
பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 200 கோடியை தாண்டிய ‘ஜெயிலர்’ வசூல்!

ஹைதராபாத்: சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கரைபுரண்ட நிலையில், ஜெயிலர் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மீண்டும் ரஜினிகாந்த் முத்திரை பதித்து உள்ளார். படம் ரிலீசாகி 6 நாட்களை தாண்டிய நிலையில், பல்வேறு இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோரும் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன் லால் ஆகியோரும் சிறப்பு தோற்றங்களில் நடித்தனர்.

முதலில் தமன்னா நடனத்தில் காவாலா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் படத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து வெளியான டைகர் ஹூக்கும் பாடலும் பட்டித் தொட்டி எங்கும் பரவி ஹிட் அடித்தது. படம் வெளியான இரண்டே நாட்களில் இந்திய அளவில் 100 கோடி வரை வசூலித்த இப்படம் உலக அளவில் 200 கோடியை தாண்டியதாக கூறப்பட்டது.

மேலும், ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 48 கோடியே 35 லட்ச ரூபாயும், இரண்டாவது நாளில் 25 கோடியே 75 லட்ச ரூபாயும், மூன்றாவது நாளில் 35 கோடி ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: Jailer collection: வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்; தியேட்டர்களை அதகளப்படுத்தும் ரசிகர்கள்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை 38 கோடி ரூபாயும், மொத்தமாக இந்திய அளவில் கடந்த 4 நாட்களில் 147 கோடி ரூபாயும், உலக அளவில் 300 கோடி வசூலை நெருங்கியதாக தெரிவிக்கப்பட்டது, இந்நிலையில் ஐந்தாவது நாளாக உலகளாவிய வசூல் 350 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டும் எனவும், இந்திய அளவில் 150 கோடி ரூபாயை தாண்டும் என்றும் கணித்து இருந்த நிலையில், இந்தியாவில் 200 கோடி ரூபாயைத் தாண்டியதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு, நான்கு நாட்களில் 300 கோடியை எட்டும் இரண்டாவது திரைப்படம் ஜெயிலர் ஆகும்.

டிரெண்டின் படி, மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை தமிழகத்தில் முறியடிக்க இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனை முறியடிக்கப்பட்டால் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ரஜினியின் ‘ஜெயிலர்’ பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Indian 2: சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்தியன் தாத்தாவின் மிரட்டலான லுக்!!

ABOUT THE AUTHOR

...view details