தமிழ்நாடு

tamil nadu

ஹுரியத் மாநாட்டின் இரண்டு பிரிவுகளுக்கு தடை?

By

Published : Aug 23, 2021, 3:41 PM IST

அனைத்து ஹுரியத் மாநாட்டின் இரண்டு பிரிவுகளும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்ய வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

J&K: Both factions of Hurriyat Conference likely to be banned under UAPA
ஹுரியத் மாநாட்டின் இரண்டு பிரிவுகளுக்கு தடை விதிக்கும் ஒன்றிய அரசு?

ஜம்மு காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக பிரிவினைவாத கருத்துகளை பரப்பிவரும், ஹுரியத் மாநாட்டின் இரண்டு அமைப்புகளும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) சட்டத்தின் கீழ் தடை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அமைப்பு மருத்துவம் பயில விரும்பும் காஷ்மீர் மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுத்தருவதாகவும், அந்தப் பணத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஹிஸ்புல் முஜாகீதின், துக்தரன்-இ-மில்லத், லஷ்கர் இ தொய்பா ஆகிய இயக்கங்களுக்கு ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு நிதியுதவி அளிப்பதாக ஒன்றிய அரசின் உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹுரியத் மாநாட்டின் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகைகளில் பணம் திரட்டி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் ஒரு மருத்துவ சீட்டுக்கு சராசரியாக ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் வரை செலவாகும். சில சந்தர்ப்பங்களில், ஹுரியத் தலைவர்களின் தலையீட்டால் இந்தக் கட்டணம் குறைக்கப்பட்டது என உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஆப்கனிலிருந்து திரும்பிய 168 பேருக்கும் கரோனா பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details