தமிழ்நாடு

tamil nadu

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் டேட்டா லாஸ் - செயற்கைக்கோள்களின் நிலையை அறிய முடியவில்லை என இஸ்ரோ தகவல்!

By

Published : Aug 7, 2022, 2:18 PM IST

Updated : Aug 7, 2022, 2:36 PM IST

எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட EOS-02 மற்றும் ஆசாதிசாட் செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப்பாதையில் இன்னும் நிலைநிறுத்தப்படவில்லை என்றும் செயற்கைக்கோள்களின் நிலையை அறிய முடியவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ISRO
ISRO

ஶ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ முதல் முறையாக, குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பிரத்யேகமான எஸ்எஸ்எல்வி (SSLV) ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. சுமார் 500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை, பூமிக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிய செயற்கைக்கோள்களுக்கான இந்த ராக்கெட்டை இஸ்ரோ இன்று (ஆக. 7) விண்ணில் செலுத்தியது. ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் 144 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்புக்கான EOS-02 செயற்கைக்கோளையும், 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் (AzaadiSAT) செயற்கைக்கோளையும் ஏந்திச் சென்றது.

ஆசாதிசாட் செயற்கைக்கோள், "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" திட்டத்தின்கீழ், நாடு முழுவதிலும் இருந்து 75 அரசுப் பள்ளி மாணவிகளை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்டது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளைக் கொண்டு இந்த முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்டது இஸ்ரோ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களும் இன்னும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இறுதிகட்டத்தில் டேட்டா லாஸ் ஏற்பட்டதால் செயற்கைக்கோள்களின் நிலை குறித்து அறிய முடிவில்லை என்றும், செயற்கைக்கோள்களின் நிலைமையை கண்டறிய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட்

Last Updated :Aug 7, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details