தமிழ்நாடு

tamil nadu

'தேஜஸ் ரயில் சேவைகள் மீண்டும் ரத்து' - ஐஆர்சிடிசி அறிவிப்பு!

By

Published : Nov 23, 2020, 7:47 PM IST

டெல்லி: பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், இரண்டு வழித்தடங்களில் இயங்கும் தேஜஸ் ரயில் சேவையை ஐஆர்சிடிசி ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

eka
eja

கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தேஜஸ் ரயில் சேவையானது, பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக். 17ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டன.

வைரஸ் (தீநுண்மி) பரவுவதைத் தடுக்க அனைத்து COVID-19 நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்று பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி உறுதியளித்தது. அனைத்து பயணிகளுக்கும் மாஸ்க், சானிடைசர், கையுறைகள் அடங்கிய COVID-19 பாதுகாப்பு கிட் வழங்கப்படும். ரயிலில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் வெப்ப பரிசோதனை நடைபெறும் என குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும், மக்களின் வருகை குறைந்த அளவிலே காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 25 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரம்பியதாக தெரிகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் இரண்டு தேஜஸ் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ரயில்களின் சேவை தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்

ABOUT THE AUTHOR

...view details