தமிழ்நாடு

tamil nadu

ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்...கப்பலை மடக்கிப் பிடித்த கடற்படை

By

Published : Oct 7, 2022, 10:40 AM IST

கேரளா கடல் பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்திச் சென்ற கப்பலை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.

கடத்தப்பட்ட 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் கப்பலைக் கையும் களவுமாகப் பிடித்த கடற்படை
கடத்தப்பட்ட 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் கப்பலைக் கையும் களவுமாகப் பிடித்த கடற்படை

கேரளா: இந்திய கடற்படை மற்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு சேர்ந்து கடத்த முற்பட்ட 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பொருட்களைக் கொண்டு சென்ற ஈரானிய கப்பலை மடக்கிப் பிடித்தனர். மேலும், பாகிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கடற்படையினர் விசாரித்தனர். அதில், அவர்களிடம் எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் வந்த கப்பலை கடற்படையினர் பறிமுதல் செய்து அதில் சோதனை நடத்தியபோது அதில் 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கப்பலைக் கொச்சிக்குக் கொண்டு சென்று போதை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: குழந்தையை கடத்திய சாதுக்கள்...தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details