தமிழ்நாடு

tamil nadu

ஏழு ஆண்டுகளில் அணு மின் உற்பத்தி 40% உயர்வு - அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

By

Published : Dec 15, 2021, 8:35 PM IST

2014ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டின் அணு மின்சார உற்பத்தித் திறன், 40%க்கு மேல் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

nuclear power capacity
nuclear power capacity

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், அணு சக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

அதில், கடந்த 7 ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணு மின்சார உற்பத்தித் திறன், 40%க்கு மேல் அதிகரித்து 4,780 மெகாவாட்டிலிருந்து 6,780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

நாட்டிற்கு நீண்ட கால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் விதமாக, உள்நாட்டு 3 நிலை அணு மின்சாரத் திட்டத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இது தவிர வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன், இலகு நீர் அணுஉலைகள் அடிப்படையிலான தூய்மையான மின்சாரத்தை வழங்குவதற்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 3 மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைக்கும் பணி இந்திய அணு மின் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 2021 நிலவரப்படி 54.96% உற்பத்தித் திறன் எட்டப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4ஆவது அணு உலைகள் அமைக்கும் பணி முறையே மார்ச் 2023 மற்றும் நவம்பர் 2023இல் முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:50 ரூபாய் செலவில் களையெடுக்கும் கருவி: இயற்கை உழவர் அசத்தல்

ABOUT THE AUTHOR

...view details