தமிழ்நாடு

tamil nadu

நேபாள விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்த 4 இந்தியர்கள்!!

By

Published : Jan 16, 2023, 1:02 PM IST

இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 பயணிகள் நேபாளில் விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்துள்ளனர்

நேபாள விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்த 4 இந்தியர்கள்
நேபாள விமான விபத்தின் போது பேஸ்புக் நேரலையில் இருந்த 4 இந்தியர்கள்

லக்னோ:ஞாயிறன்று நேபாளில் எதிர்பாராத விதமாக விமான விபத்து ஏற்பட்டதில் 68 பேர் இறந்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 பயணிகள் தனது அனுபவத்தை பகிர பேஸ்புக் நேரலையில் இருந்துள்ளனர். விமான விபத்து ஏற்படும் முன் 1.3 நிமிடங்கள் பேஸ்புக் நேரலையில் இருந்துள்ளனர்.

நேரலையில் 58வது நொடியில் விமானம் இடது பக்கம் திரும்பி வெடித்து சிதறுவது போன் கேமராவில் பதிவாகியிருந்தது. விபத்தில் இறந்த 5 இந்தியர்களில் 4 பேர் உத்திர பிரதேசம் காஸியாபூரை சேர்ந்தவர்கள் ஆவர்.

சோனு ஜெய்ஸ்வால் (29), அனில் ராஜ்பார் (28), விஷால் ஷர்மா (23), அபிஷேக் சிங் குஷ்வாஹா(23) ஆகியோர் ஜனவரி 13ஆம் தேதி காத்மாண்டுவிற்கு சென்று பொக்ராவுக்குச் திரும்பி கொண்டிருந்தனர்.

சோனு ஜெய்ஸ்வால் மதுபான வியாபாரியாகவும், அனில் ராஜ்பார் மற்றும் அபிஷேக் குஷ்வாஹா ஜன் சேவா மையங்களை நடத்தி வந்தனர். விஷால் சர்மா இரு சக்கர வாகன ஏஜென்சியில் நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அந்த வீடியோ நேரலை சோனு ஜெய்ஸ்வால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து வந்தது என அவரது உறவினர் ரஜத் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தினார். "நேபாள விமான விபத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து காஜிபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர் என்றார்.

இதையும் படிங்க: டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details