தமிழ்நாடு

tamil nadu

Exclusive: ரஷ்ய - உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு!

By

Published : Mar 1, 2022, 3:53 PM IST

Updated : Mar 1, 2022, 5:18 PM IST

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய- உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு
ரஷ்ய- உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழப்பு

கர்நாடகா: ரஷ்யா-உக்ரைனுக்கு இடையேயான போரில் இன்று உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடக மாணவன் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் கார்கிவ் நகரில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று காலை உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. மாணவனின் குடும்பத்தாருடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தூதரகத்திடம் இந்திய மாணவர்களை மீட்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கார்கிவ் மற்றும் போர் நடக்கக்கூடிய இடங்களிலிருந்து இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாணவனின் குடும்பத்தார் பதற்றம்

உக்ரைனில் இறந்த இந்திய மாணவன் நவீன்(22) கர்நாடக மாநிலத்தின் செலகிரி மாவட்டத்தின் ஹவேரி கிராமத்தை சேர்ந்தவர். நவீன் முன்னதாக கர்நாடக மாநிலத்தின் ஸ்ரீலகோபா மற்றும் மைசூரில் படித்து வந்தார். நவீனின் தந்தை சேகரப்பா தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் அரபு நாடுகள் மற்றும் மைசூரில் பணியாற்றி உள்ளார். பின்னதாக இவர்களது சொந்த ஊரான ஹவேரி கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

மாணவனின் குடும்பத்தார் பதற்றம்

நவீன், சேகரப்பாவிற்கு மூன்றாவது மகன் ஆவார். குடும்பத்தில் உள்ள வறுமையையும் பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு மருத்துவம் படிப்பதற்கு அனுப்பி வைத்துள்ளனர். நவீன் தற்போது MBBS நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 1)காலை உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் சூப்பர் மார்க்கெட்டில் நவீன் இருந்தபோது ரஷ்யாவின் ஏவுகணைத்தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து கிராமத்தினர் மாணவனின் வீட்டின் முன்பு கூடினர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

ஹவேரி கிராமத்தைச் சேர்ந்த மற்ற மாணவர்கள்

இந்திய மாணவன் நவீன் இன்று காலை உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகர் மீதான ரஷ்யப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து மாணவனின் குடும்பத்தார் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளனர். கர்நாடக மாநிலம், செலகிரி மாவட்டத்தின் ஹவேரி கிராமத்தைச் சேர்ந்த நவீன், உக்ரைனில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அதே கிராமமான ஹவேரியைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் (அமித் மற்றும் சுமன்) உக்ரைனில் MBBS படித்து வருவதாகவும், அவர்களை உயிருடன் மீட்க மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!

Last Updated : Mar 1, 2022, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details