தமிழ்நாடு

tamil nadu

India corona cases: குறைந்து வரும் கோவிட் பாதிப்பு; ஓய்கிறதா மூன்றாம் அலை?

By

Published : Feb 1, 2022, 10:30 AM IST

நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,192 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

India corona cases
India corona cases

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 14 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் பதிவாகிவந்த நிலையில், அன்மை நாள்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது.

நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,192ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 96 ஆயிரத்து 242 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 17 லட்சத்து 43 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 198 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 166.68 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் நேற்று (ஜன 31) மட்டும் 61 லட்சத்து 45 ஆயிரத்து 767 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 94 கோடியே 31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 71 கோடியே 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 19 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:Horoscope 2022: பிப்ரவரி முதல் நாள் ராசிபலன் - உங்க ராசி எப்படி?

ABOUT THE AUTHOR

...view details