தமிழ்நாடு

tamil nadu

Covid-19 : இந்தியாவில் ஒரே நாளில் 11,850 பேருக்கு பாதிப்பு

By

Published : Nov 13, 2021, 12:50 PM IST

11 ஆயிரத்து 850 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஒரே நாளில் 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19
கோவிட்-19

நாட்டில் கடந்த ஒருநாளில்(நவ 13) 11 ஆயிரத்து 850 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 44 லட்சத்து 26 ஆயிரத்து 036 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் (Covid-19) 555 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 63 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நேற்று(நவ 12) ஒரே நாளில் 58 லட்சத்து 29 ஆயிரத்து 864 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 111 கோடியே 54 லட்சத்து 36 ஆயிரத்து 894 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

75 கோடியே நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசியும், 36 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:நீங்கள் இந்து என்றால் இந்துத்துவம் எதற்கு? ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக சாட்டை சுழற்றும் ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details