தமிழ்நாடு

tamil nadu

குறைந்தது கரோனா! இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான தொற்றாளர்கள்

By

Published : Feb 7, 2022, 12:02 PM IST

கரோனா மூன்றாவது அலை தொடங்கியதிலிருந்து 32 நாள்களுக்குப் பிறகு நேற்று கரோனா தொற்று ஒரு லட்சத்தைவிட குறைந்தது.

குறைந்தது கரோனா!; இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான தொற்றுகள்
குறைந்தது கரோனா!; இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான தொற்றுகள்

டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கி தற்போது கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்துவருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 876 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 32 நாள்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொற்று இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இன்று 895 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 73 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தினசரி பரவல் விகிதம் 7.25 விழுக்காடாகவும், வாராந்திர பரவல் விகிதம் 9.18 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது, என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே ஆறு லட்சத்து 60 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளுக்கு இறப்பு விகிதம் 1.19 விழுக்காடாக உள்ளது.

தடுப்பூசியே காரணம்

இந்தியாவில் கரோனா தொற்று கணிசமாகக் குறைந்துவருவதற்கு இந்திய அரசின் மெகா தடுப்பூசி இயக்கமே காரணம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 169.63 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

மே 4, 2021 அன்று இந்தியா இரண்டு கோடி தடுப்பூசிகள், ஜூன் 23 அன்று மூன்று கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இறப்புகளில்,

895 புதிய இறப்புகளில் கேரளாவில் அதிகபட்சமாக 515 பேரும், மகாராஷ்டிராவில் 66 பேரும் எனப் பதிவாகியுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 74, கேரளாவில் 58 ஆயிரத்து 255, கர்நாடகாவில் 39 ஆயிரத்து 347, தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 759, டெல்லியில் 25 ஆயிரத்து 983, உத்தரப் பிரதேசத்தில் 23 ஆயிரத்து 318, மேற்கு வங்கத்தில் 20 ஆயிரத்து 823 உள்பட இதுவரை நாட்டில் ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 874 இறப்புகள் பதிவாகியுள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 6,120 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details