தமிழ்நாடு

tamil nadu

200 நாள்களுக்குப் பிறகு குறைந்த கரோனா எண்ணிக்கை!

By

Published : Oct 4, 2021, 12:23 PM IST

நாட்டில் 200 நாள்களுக்குப் பிறகு 21 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

India COVID-19 tracker  India COVID-19 report  India COVID-19 data  India coronavirus count  India COVID statistics  corona virus  corona count  கரோனா  கரோனா பரவல்  காரோனா தொற்று  கரோனா பாதிப்பு  இந்தியாவில் கரோனா பாதிப்புகள்  கரோனா நிலவரம்  இந்திய கரோனா எண்ணிக்கை
கரோனா

டெல்லி:நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 799 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 200 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் 21 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதென ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 718 நபர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247ஆக உயர்ந்துள்ளது.

180 பேர் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், இதுவரை மொத்தம் 90 கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 861 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் 57.42 கோடி நபர்களின் சளி உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (அக்.03) மட்டும் ஒரே நாளில் ஒன்பது லட்சத்து 91 ஆயிரத்து 676 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்

ABOUT THE AUTHOR

...view details