தமிழ்நாடு

tamil nadu

இரண்டாவது நாளாக இந்தியாவில் 1 லட்சத்திற்கும்கீழ் கரோனா பதிவு

By

Published : Jun 9, 2021, 10:09 AM IST

இந்தியா: நேற்று(ஜுன்.8) புதிதாக 92 ஆயிரத்து 596 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69ஆக உள்ளது.

நேற்று (ஜுன்.8) மட்டும் 2 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 53ஆயிரத்து 528ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126ஆக உள்ளது. தற்போது 12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இதுவரை, மொத்தமாக 23 கோடியே 90 லட்சத்து 58ஆயிரத்து 360 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details