தமிழ்நாடு

tamil nadu

ஆப்கனிலிருந்து திரும்பிய 168 பேருக்கும் கரோனா பரிசோதனை!

By

Published : Aug 22, 2021, 1:42 PM IST

ஆப்கனிலிருந்து இந்தியா வந்துள்ள 168 பேருக்கும் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தாலிபான்கள்
தாலிபான்கள்

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, அங்கு வசித்துவந்த ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டு மக்களும் அந்நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.

அதன்படி, ஒன்றிய அரசு ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை காபூலில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஆக.22) இந்திய விமானப் படையின் சி17 ரக விமானம் 107 இந்தியர்கள் உள்பட 168 பேருடன் காசியாபாத் ஹின்டன் விமானப் படை தளத்திற்கு வந்துள்ளது.

அதில் வந்த அனைவருக்கும் விமான நிலையத்திலே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே, அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொல்கத்தா சந்தைகளில் களைகட்டும் மோடிஜி பெஹன்ஜி ராக்கிகள்!

ABOUT THE AUTHOR

...view details