தமிழ்நாடு

tamil nadu

தன்பாலின ஈர்ப்பு விவகாரம்; தகராறில் இளம்பெண்கள் காயம்..!

By

Published : Oct 21, 2022, 9:48 PM IST

கர்நாடகா அருகே தாவணகெரேவில் தன்பாலின ஈர்ப்பு காரணமாக இளம்பெண் ஒருவர் தனது தோழியை தெருவில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் காயமடைந்து தாவணகெரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன்பாலின ஈர்ப்பு விவகாரம்
தன்பாலின ஈர்ப்பு விவகாரம்

கர்நாடகா:தாவணகெரேவில் தன்பாலின ஈர்ப்பு தொடர்பாகத் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் இரண்டு இளம்பெண்கள் வியாழக்கிழமை மாலை தகராறில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

பின்னர் இங்குள்ள சாந்தி நகரில் வியாழக்கிழமை மாலை இரு இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை, தாக்குதலாக மாறிய சம்பவம் நடந்தது. சாலையில், இளம்பெண்ணை மற்றொரு இளம்பெண் ரேடியம் கட்டர் மூலம் தாக்கியதில், இருவரும் காயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இரண்டு இளம்பெண்கள் சாலையில் சண்டை போட்டுக் கொண்டு கீழே விழுந்தது அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவத்துக்கான காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருக்குள்ளும் தன்பாலின ஈர்ப்பு பின்னணியில் சண்டை நடந்ததாக தாவணகெரே எஸ்.பி. சிபி ரிஷ்யந்த் தெரிவித்தார்.

'இரண்டு இளம்பெண்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாகவும், நெருக்கமாகவும் பழகியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சமீபத்தில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு தன்பாலின ஈர்ப்பாக மாறியது. எனினும், அண்மையில் அவர்களில் ஒருவர் வேறொரு பெண்ணுடன் தொலைபேசியில் பேசி நெருங்கிப் பழகியது தகராறுக்கு முக்கிய காரணமாகும்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் ரேடியம் கட்டர் மூலம் தனது தோழியைத் தாக்கியுள்ளார். இதில் இளம்பெண்ணின் கழுத்து, கன்னம், கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் தாக்கியவர் தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்று எஸ்.பி. சிபி ரிஷ்யந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​காயமடைந்த பெண் சிகிச்சைக்காக தாவணகெரே மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, இது தொடர்பாக வித்யாநகர் காவல் நிலையத்தில் 307 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.பி.சிபி ரிஷ்யந்த் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:குமரி சிறுவன் உயிரிழப்பு; இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

ABOUT THE AUTHOR

...view details