தமிழ்நாடு

tamil nadu

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...

By

Published : May 9, 2022, 10:33 AM IST

Updated : May 9, 2022, 10:51 AM IST

கர்நாடகா மாநிலம் மைசூரில் இறந்த தந்தை மீது கொண்ட பாசத்தால் தந்தையின் மெழுகு சிலை முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’- இறந்த தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம்  செய்த மகன்!
’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே’- இறந்த தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம் செய்த மகன்!

மைசூர்(கர்நாடகா): . மைசூர் மாவட்டம் நஞ்சாகுண்டுவில் உள்ள திருமண மகாலில் திருமணம் அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களுடன் சிறப்புடன் நடைபெற்றது.

மருத்துவர் யாதீஷ் மைசூர் ஜேஜேஎஸ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இவரது குடும்பத்தினர் சிக்கமங்கலூர் மாவட்டத்தில் உள்ள கட்டூர் தாலுகாவில் வசித்து வந்துள்ளனர். இவரது தந்தை ரமேஷ் கடந்த வருடம் கரோனவால் உயிரிழந்தார். இதனையடுத்து யாதீஷ்க்கும் மருத்துவர் அபூர்வாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...

திருமணத்தில் தன் தந்தையும் கலந்து கொள்ள வேண்டும் என யாதீஷ் மிகவும் விரும்பினார். இந்நிலையில் அவரது தந்தையின் மெழுகு உருவச் சிலையை வடிவமைத்து அந்த சிலையின் அருகே தன் தாயை அமர வைத்து இருவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

தந்தையின் மெழுகு சிலை

இது குறித்து யாதீஷ் கூறுகையில், ‘ சென்ற வருடம் எனது தந்தை கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தார். என்னால் என் தந்தையை மறக்க முடியவில்லை. அவர் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து் தந்தை சிலை முன் திருமணம் செய்ய முடிவு எடுத்தோம். எனது தந்தை ஆசி வழங்கியது போல் உணர்கிறேன்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஒடிசாவில் 64 பள்ளி மாணவர்களுக்கு கரோனா

Last Updated : May 9, 2022, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details