தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் 'யுபிஐ ஆட்டோ பே' முறை அறிமுகம் - கூகுள் நிறுவனம் அறிவிப்பு!

By

Published : Nov 16, 2022, 5:08 PM IST

இந்தியாவில் உள்ள கூகுள் பே பயனாளர்களுக்காக 'யுபிஐ ஆட்டோ பே' முறையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google
google

டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சிறியது முதல் பெரியது வரை ஏராளமான பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் யுபிஐ வசதியையே விரும்பி பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிலும் அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, யுபிஐ ஆட்டோ பே (UPI Autopay) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

யுபிஐ ஆட்டோ பே என்பது, இஎம்ஐ, மின்கட்டணம் உள்ளிட்ட சந்தா அடிப்படையிலான கட்டணங்களை கால தாமதம் இல்லாமல் செலுத்த பயன்படுகிறது. நாம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய கட்டணங்களின் விவரங்களை அதில் செட் செய்து வைத்துவிட்டால், குறிப்பிட்ட தேதியில் கட்டணங்கள் தானாகவே செலுத்தப்பட்டுவிடும். காலதாமதம் ஏற்பட்டு, அபராதம் செலுத்துவது போன்ற சூழல்களைத் தவிர்க்க இந்த அப்டேட் பயனுள்ளதாக இருக்கிறது.

யுபிஐ 2.0-வாக பார்க்கப்படும் இந்த ஆட்டோ பே முறைக்கு, நேஷனல் பேமென்ட் கார்ப்ரேஷன் (National Payments Corporation of India) கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து வகையான யுபிஐ ஆப்களிலும் இந்த ஆட்டோ பே முறையைப் பயன்படுத்த முடியும்.

இந்த நிலையில், யுபிஐ ஆட்டோ பே முறையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த யுபிஐ ஆட்டோ பே முறை மாதாந்திர கட்டணங்களை செலுத்த பயனுள்ளதாக இருக்கும் என்றும், இந்த சேவைக்கு மாதமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூகுள் ப்ளே (Google Play) தெரிவித்துள்ளது.

மக்கள் தங்களது கட்டணங்களை செலுத்துவதை எளிமையாக்கவும், சந்தா அடிப்படையிலான வணிக சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த ஆட்டோ பே முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான கூகுள் பிளே ரீடெய்ல் மற்றும் பேமென்ட்ஸ் ஆக்டிவேஷன் தலைவர் சவுரப் அகர்வால் தெரிவித்தார். பயனர்கள் 170-க்கும் மேற்பட்ட வணிகத் தளங்களில் பாதுகாப்பாகவும் தடையின்றியும் பரிவர்த்தனை செய்ய இந்த யுபிஐ ஆட்டோ பே முறை உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆண்டுக்கு 3000 இந்தியர்களுக்கு சிறப்பு விசா - பிரிட்டன் பிரதமரின் ஹேப்பி நியூஸ்!

ABOUT THE AUTHOR

...view details