தமிழ்நாடு

tamil nadu

ஆக்ராவில் ஹோட்டல் பணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 10:14 PM IST

Gangraped by employees of homestay: ஆக்ரா மாவட்டத்தில் ஹோட்டலில் (Homestay) வேலை பார்த்த பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நான்கு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

girl-gangraped-by-employees-of-homestay-in-uttar-pradeshs-agra-four-held
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஹோட்டலில் வேலை பார்த்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேர் கைது!

ஆக்ரா (உத்தரபிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் தாஜ்நகரி 2 ஆம் கட்டடத்தில் ஹோட்டலில் வேலை பார்த்த பெண்ணை சனிக்கிழமை (நவ.11) இரவு கூட்டுப் பாலியல் செய்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து தாஜ்நகரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு நபர்களைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தாஜ்நகரி 2 ஆம் கட்டடத்தில் செயல்படும் ஹோட்டலில் பெண் ஒருவர் கத்துவது போல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் தாஜ்நகரி காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜிதேந்திர ரத்தோர், ரவி ரத்தோர், மணீஷ் குமார் மற்றும் தேவ் கிஷோர் ஆகிய நான்கு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் ஒருவரைத் தேடி வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது X பக்கத்தில், "இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் தாஜ்நகரில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் பயமாகவும் மனிதத் தன்மை இல்லாததைக் காட்டுகிறது. உடனடியாக அந்த வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக வலைத்தளத்தை முடக்க வேண்டும் என்றும், தீபாவளி அன்று இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். இப்படிப்பட்ட குற்றவாளிகள் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மாநகர டிசிபி சிட்டி சூரஐ் ராய் கூறும் போது, "பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஒன்றை ஆண்டுகளாக ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஜிதேந்திர ரத்தோர் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என மிரட்டிப் பல நாட்களாக பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் பணம் பறித்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை (நவ.11) இரவு அதே வீடியோ பதிவைக் காட்டி பெண்ணை மிரட்டி மது குடிக்க வைத்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.

கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தலைமறைவான ஒருவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் நடந்த கொடூரம்..! காதல் விவகாரத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது..!

ABOUT THE AUTHOR

...view details