தமிழ்நாடு

tamil nadu

ஜார்கண்டில் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 10:53 PM IST

4 persons crushed to death by express train: ஜார்கண்ட் மாநிலம் கமாரியா ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநிலம் பூரி நோக்கி சென்று கொண்டு இருந்த உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

செரைகேலா: ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா - கார்ஸ்வான் மாவட்டத்தில் கமாரியா ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தின் அருகே இன்று (ஜன. 18) மாலை ஒடிசா மாநிலம் பூரி செல்லும் உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுக்காப்பு துறையினர் (RPF) சம்பவ இடத்திற்கு விரைந்து 4 பேரது உடலையும் மீட்டனர். இவர்கள் அப்பகுதிக்கு அருகே குடிசையில் வசிப்பவர்கள் எனவும், இவர்கள் 4 பேரும் சுமார் மாலை 6.55 மணி அளவில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் காவல் துறையினரின் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், இந்த விபத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், துரந்தோ மற்றும் சில ரயில்களின் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:தெற்கு சிரியா மீது ஜோர்டான் வான்வழி தாக்குதல்.. 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details