தமிழ்நாடு

tamil nadu

ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு… ஆந்திர அரசியலில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 1:43 PM IST

Ambati Rayudu: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட அம்பதி ராயுடு, கடந்த 2013-இல் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, 55 ஒருநாள் போட்டிகளிலும், ஆறு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அதேபோல் ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய அணிகளுக்காக 204 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அம்பதி ராயுடு கடந்த வாரம் ஆந்திராவில் ஆளும்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே.நாராயண சுவாமி முன்னிலையில் இணைந்தார்.

இதையும் படிங்க:ரேஷன் ஊழல் வழக்கு; திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!

இந்நிலையில், இன்று அம்பதி ராயுடு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில், ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் அரசியல் கட்சியில் இணைந்து ஒரே வாரத்தில் விலகியது, ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க:இன்று மாலை இலக்கை அடைகிறது ஆதித்யா எல்1!

ABOUT THE AUTHOR

...view details