தமிழ்நாடு

tamil nadu

சுற்றுலாப்பயணி படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுக்கடலில் போராடிய புதுச்சேரி மீனவர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:41 PM IST

Puducherry news: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணி படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும்‌ மேற்பட்ட படகுகளை நடுக்கடலில் நிறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுக்கடலில் போராடி வரும் புதுச்சேரி மீனவர்கள்
நடுக்கடலில் போராடி வரும் புதுச்சேரி மீனவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 8 சுற்றுலாப்பயணி படகுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படகு அரிக்கமேடு பகுதியில் இருந்து தொடங்கி, மாங்குரோவ் காடுகள் வழியாகச் சென்று தேங்காய்திட்டு துறைமுகப் பகுதியில் வந்தடைகிறது. இந்த நிலையில், அரசு அனுமதியின்றி சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து, தொழில்புரிவு மீனவர் அமைப்பு மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்ட படகுகளை நடுக்கடலில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், "தேங்காய் திட்டு துறைமுகப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணி படகுகளால் மீன்வளம், எறா உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதியின்றி செயல்படும் சுற்றுலாப் படகுகளில் விபத்து ஏற்பட்டால், சுற்றுலாப் பயணிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அரசிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்" என எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. குவியும் சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details